தேனி கோட்டத்திற்குட்பட்ட தேனி, வீரபாண்டி, தேவாரம், போடி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (5.7.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபோல், சின்னமனூர் கோட்டத்தில் உள்ள கம்பம், மார்க்கையன்கோட்டை, சின்னஓவுலாபுரம், காமாட்சிபுரம் ஆகிய 4 துணை மின் நிலையங்களிலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


மேலும் படிக்க: Priyanka Chopra react to kid: காதலிப்பதாக சொன்ன சிறுவன்: மகிழ்ச்சியில் பிரியங்கா செய்த காரியத்தை பாருங்க..!


 




மாவட்டத்தில் ஒரே நாளில் 8 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி, காமாட்சிபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.


மேலும் படிக்க: Railway: ரயில் நிலையத்தில் உள்ளூர் பொருட்கள் விற்பனையில் பனை பொருட்களுக்கு முதல் இடம் !




அதேபோல், தேனி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம், வீரபாண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, சடையால்பட்டி. தேவாரம் தேவாரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, பி.ஆர்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, போடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி ஆகிய பகுதிகளுக்கும் நாளை மறுநாள் மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என  தேனி மின்வாரிய  நிர்வாகமும், சின்னமனூர் மின்வாரிய நிர்வாகமும் தெரிவித்தது.


மேலும் படிக்க: Himachal pradesh Bus accident: இமாச்சல பிரதேசத்தில் கோர விபத்து..! 16 பேர் உயிரிழந்த சோகம்...!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண