இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது குல்லு. இங்கு நியோலியில் இருந்து சான்ஷெர் செல்லும் சாலை அமைந்துள்ளது. மலைப்பாங்கான இந்த சாலையில் வாகனங்கள் மிகவும் கவனமாக மெதுவாகவே இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று காலை குல்லுவில் இருந்து சயிஞ்ச் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது.
அந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் உள்பட பலரும் பயணித்துள்ளனர். சரியாக இன்று காலை 8.30 மணியளவில் ஜங்கலா கிராமம் அருகே பேருந்து சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கீழே கவிழ்ந்தது. இதில் பேருந்து பல முறை உருண்டதில் பேருந்து நசுங்கியது. இந்த கோரவிபத்தில் பேருந்தில் பயணித்த பள்ளிமாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக, தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பினர். மேலும், உயிரிழந்தவர்களையும் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த மாநில மதல்வர் ஜெய்ராம் தாக்கூர் முழு நிர்வாகத்தையும் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தான் பிரார்த்திப்பதாகவும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குல்லு பேருந்து விபத்து இதயத்தை கனக்கவைத்துள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவருவார்கள் என்று நம்புகிறேன். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பள்ளிமாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்