புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி மதுரை வைகை ஆற்றில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுககு தர்ப்பண வழிபாடு செய்ய குவிந்தனர்.


பித்ரு தோஷம்:


பித்ருலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், அவர்களின் நம் உழைப்பிற்கு ஏற்றவாறு உழைப்பின் பலனை ஆசீர்வாதமாக அளிப்பார்கள். நமது நற்செயல்களுக்கு அவர்களின் ஒப்புதலை காட்டுவதற்காக இல்லத்தரசிகளுக்கு மட்டுமின்றி, பரலோகத்தில் இருந்து ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கும் யோகிகளுக்கும், ரிஷிகளுக்கும் மற்றும் சுமூகமான பரிணாமத்தை தொடர இது ஒரு முக்கியமான நேரம் என்பது ஐதீகம்.


நமது ஆன்மீக முன்னேற்றத்தின் பாதை என்பது, நமக்கு தெரியாத காரணங்களால் நமக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டால், இந்த நாளில் உங்கள் முன்னோர்களை வணங்குவதன் மூலம் நீங்கள் பரிகாரம் செய்யலாம். இதனால் அவர்கள் தெய்வீக மனிதர்களாக, தங்கள் கருணையையும் மன்னிப்பையும் உங்கள் மீது பொழிந்து, உங்கள் முன்னோக்கி செல்லும்படி ஆசீர்வதிப்பார்கள் என நம்பப்படுகிறது.


தர்ப்பணம்:


முன்னோர் வழிபாட்டின் சடங்குகள், மஹாளயா சர்வ பித்ரு அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. மஹாளயா அன்று சிரார்த்த அனுஷ்டானங்கள் குறிப்பாக பூர்ணிமா, சதுர்த்தி மற்றும் அமாவாசை திதியில் அந்த முன்னோர்களை வணக்கத்துக்கு உரியவர்களாக கொண்டுள்ளன.




இந்நாளில் நம் முன்னோர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துவது முக்கியம். மகாளய அமாவாசை தினமான புரட்டாசி அமாவாசை இன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது எனப் புராணங்கள் கூறுகின்றன.


அமாவாசை:


சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். இந்நிலையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் மதுரையில் இன்று அதிகாலை முதலே நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


 






இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும், யானைக்கல் வைகையாற்று பகுதி, வைகை ஆற்றுக் கரையான பேச்சியம்மன் படித்துறையிலும் ஏராளமானர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வைகை ஆற்று நீரில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.




இதேபோன்று திருமலையார் படித்துறை காசி விஸ்வநாதர் கோவிலிலும், மதுரை புதூர் அமிர்தகடேஸ்வரர் அங்காள பரமேஸ்வரி கோவிலும், மதுரை யானைக்கல் தரைப்பாலத்தின் அடியிலும் புரோகிதர்கள் முன்னிலையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. வைகை ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து முன்னோர்களின் பெயர்களில் ஏழை எளியோருக்கு உதவிகளை வழங்கினர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு