தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரமாகவும், பாசனத்திற்கும் உள்ளது சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணை. கடந்த இரண்டு மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் போனதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.




இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 7 அடி உயர்ந்து அதன்  முழு கொள்ளளவான 126.28 அடியில் அணையின் நீர்மட்டம் 99.22 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 42 கன அடியாக உள்ள நிலையில், குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


இன்று மஹாளய அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் ராமேஸ்வரம், ஒகேனக்கலில் குவியும் பக்தர்கள்..!




அதேபோல் மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்ட உள்ளது. மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 55 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து 47 கண அடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றம் இல்லை. மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 710 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.


மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கவில்லை. இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழை கைகொடுத்து, வைகை அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்


TN Special Buses: ஆயுத பூஜைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதுதான்..பாருங்க!