தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை, தென்னை, வாழை என அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும் வேளாண் பகுதியாக விளங்குகிறது. கம்பமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூடலூர் சுருளிப்பட்டி காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மட்டுமல்லாமல் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை தற்போது விவசாயம் செய்யப்பட்டு விளைச்சலும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் வியாபாரம் இன்மையாலும் விலை இன்மையாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகின்றனர் - தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியா
வரும் ஜனவரி 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பனங்கள் இறக்கும் போராட்டம்
இந்த பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால், அதிக அளவில் கேரளாவுக்கு திராட்சை ஏற்றுமதியும் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதம் வரை விளைச்சலும் இருந்து அதிக விலையும் போன திராட்சை தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை எதிரொலியால் விலை போகாமல் கொள்முதல் செய்ய ஆளில்லாமல் திராட்சை பறிக்காமல் செடியிலேயே விடவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பியூட்டி பார்லர் வந்த ப்ளஸ் 2 மாணவிக்கு பாலியல் சீண்டல்: 4 பேர் கைது; டார்ஜிலிங் பெண் தலைமறைவு!
இங்கு விளையும் திராட்சைகள் அதிகளவில் கேரளாவிற்கு ஏற்றுமதியும் செய்யப்படும். கேரளாவில் வடகிழக்கு பருவமழை ஆரம்பத்திலேயே அதிக மழை பொழிவால் திராட்சை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையலும் கேரள வியாபாரிகள் வருகை குறைவாலும் திராட்சை தேக்கம் அடைந்துள்ளதால் விளைச்சல் இருந்தும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாய்க்கு விற்ற கருப்பு பன்னீர் திராட்சை இன்று கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்