சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் பள்ளியைச் சேர்ந்த, பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் தனது தோழியுடன் சென்று வந்தார். இதில் அழகு நிலைய பெண் பொறுப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது உதவியுடன், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையைச் சேர்ந்த மணிமாறன் மகன் விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த பொன்னுவேல் மனைவி லட்சுமி (45) உட்பட 4 பேர் மீது காரைக்குடி மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, லட்சுமி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மன்ஸிலை தேடி வருகின்றனர்.
அதே போல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எம்.சூரக்குடியில் கூலி வேலை செய்து வரும் தம்பதியினருக்கு 3 பெண்குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையுள்ளது. கணவன், மனைவி கடந்த ஒரு ஆண்டு காலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். 12 வயதுடைய மூத்த பெண் மற்றும் 6 வயது ஆண் குழந்தையை கணவனிடம் விட்டு மற்ற இரு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மனைவி சிவகங்கை அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் இந்த சிறுமி அருகில் உள்ள வயலில் பள்ளி விடுமுறை நாட்களில் மாடு மேய்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து இந்த 12 வயது சிறுமிக்கு அவ்வப்போது சாக்லேட் மற்றும் உணவு வாங்கி கொடுத்து அதே ஊரைச் சேர்ந்த கணபதி (28) என்பவர் பல முறை பாலியல் தொல்லை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் தாயாருக்கு தகவல் தெரிந்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணபதி என்பவரை கைது செய்து பின்பு சிறுமியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது கணபதியுடன் சேர்ந்து, அங்கு கட்டட வேலைக்கு வந்த ஆருகுடிப்பட்டி பிரபு வயது(35) என்பவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்அதில் கைது செய்யப்பட்ட, கணபதி மற்றும் பிரபுவையும் கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை எஸ்பி. செந்தில் குமார் கூறுகையில்...,” பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மொபைல் எண் தொடர்புகளை கண்காணிக்க வேண்டும். பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் சிறுமிகள் எந்தவித தயக்கமுமின்றி மகளிர் காவல் நிலையங்கள், தொலைபேசி எண்கள் 100, 1098 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!