எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்களுக்கு ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) ஜூன் 4 முதல் ஆகஸ்ட் 6 வரை சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) ஜூன் 5 முதல் ஆகஸ்ட் 7 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், சாஸ்தான் கோட்டை, கொல்லம், குன்டரா, கொட்டாரக்கரா, அவனிஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தற்போது இந்த ரயில்கள் நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும். வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவு குறித்த சர்ச்சை ; மகளிர் குழு ஒப்பந்தம் ரத்து செய்ய பரிந்துரை !