நியோ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Neomax Private Limited ) என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். 

ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.



 

 

மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலை உயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் திருநெல்வேலி கிளை நிறுவனத்தின் இயக்குநர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சார்ந்த சைமன் ராஜா மற்றும் தேவகோட்டை பகுதியைச் சார்ந்த கபில் என்கின்ற இயக்குநரும் இருவரும் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 26 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டதை இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 


 



 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண