கொடைக்கான‌ல் ம‌லைக்கிராம‌ங்க‌ளில் தொட‌ரும் ம‌ர்ம‌க்காய்ச்ச‌ல், விவசாய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மலைகிராம விவசாயிகள், ந‌ட‌வ‌டிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரதுறைக்கு கோரிக்கை



திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன,இந்த கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. இதில் கூக்கால், போளூர், கிளாவ‌ரை, உள்ளிட்ட‌  மேல்ம‌லைக் கிராம‌ங்க‌ளில் கடந்த சில தினங்களாக முதியவர்கள் மற்றும்  குழந்தைகள்  உட்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு   ம‌ர்ம‌க்காய்ச்ச‌ல் மூலம்  பாதிக்க‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தாக ம‌லைக்கிராம‌ ம‌க்கள் வேதனையுடன்  தெரிவிக்கின்ற‌ன‌ர்.




இந்த‌ ம‌லைக்கிராம‌ங்க‌ளில் சுகாதார‌துறையின‌ர் கிராம மக்களுக்கு முறையான பரிசோதனை செய்யாமல் ம‌ருத்துவ‌ முகாம் அமைத்து மருந்து,மாத்திரைகள் மட்டும் தருவதாகவும், ஓரிரு நாளில் திரும்பவும் கை,கால் வலி,காய்ச்சல் உள்ளிட்டவைகளால்  பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் . இதனால் விவசாய பணிகளுக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கி தவித்து வருவதாகவும்  வேதனையுடன் கூறுகின்றனர், மேலும் இந்த மலைகிராமங்களில் குப்பைகள் எடுக்காமலும் , சுகாதாரம் இன்றி  இருந்து வரும் தெருக்களை கூட   சுத்த‌ம் செய்ய யாரும் வரவில்லை  என்ற‌ குற்ற‌ச்சாட்டும் எழுந்துள்ள‌து, இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி மேல்மலை கிராமங்களில் மர்ம காய்ச்சல் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவ முகாம் மற்றும் மருத்துவர்களை நியமித்து பரிசோதனை செய்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என  போளூர், கிளாவ‌ரை மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் கொரோனா விதிமுறைகளை மீறி போளூர் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மேல்மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு போதிய கொரோனா விழிப்புணர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. ஏற்கனவே கிராமங்களுக்கு கொரோனா தொற்று பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, கிராமங்களில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மலை கிராமங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.




அவசரத்திற்கு மருத்துவ வசதி இல்லாதவர்கள் மலை கிராமங்களில் வசிப்போர். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் கூட அடுத்தடுத்த நபர்களுக்கு அது பரவும் என்பதால் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறையினர் மெத்தனமாக செயல்படக்கூடாது. காய்ச்சல், தலைவலி என வீட்டில் முடங்கியிருப்பவர்களுக்கு உடனே முதலுதவி அளிக்கவும், கிராமங்களில் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். தேவைப்பட்டால் முழுமையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.




உள்ளாட்சி அமைப்புகள் அதற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் சுகாதாரத்தை உள்ளாட்சிகள் உறுதி செய்ய வேண்டும். துப்புரவை ஒழுங்குப்படுத்த வேண்டும்.