பண்டிகை கால கூட்ட நெரிசலை  சமாளிக்க மைசூர் - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06201) செப்டம்பர் 7 அன்று மதியம் 12.15மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் - மைசூர் சிறப்பு ரயில் (06202) செப்டம்பர் 8 அன்று மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு மைசூர் சென்று சேரும்.




இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.


கூடுதல் செய்தி படிக்க - கீழடி அகழாய்வு: அகரத்தில் கிடைத்த 9 அடுக்கு உறைகிணறு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !




இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -”அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கி உள்ளது” - செல்லூர் கே.ராஜூ பெருமிதம் !



அதே போல் ரயில் பாதையை பலப்படுத்தும் பணி - மதுரை - செங்கோட்டை ரயில் ஆறு நாட்களுக்கு ரத்து


ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில்  ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ஆகியவை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண