ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக் குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியது இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை சந்தித்து இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது.., ”அ.தி.மு.க., வெற்றிச் சரித்திரத்தல் மற்றுமொறு மகுடமாக சிறப்பான தீர்ப்பை நீதிபதி வழங்கி இருக்கிறார். உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கி உள்ளது. கழகத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மவிடம் அரசியல் கற்றவர் கட்சித் தொண்டகளை அரவணைப்பில், கட்சியை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார். இந்த வெற்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றியாக தெரிக்கிறது. கேரளா செல்லும் தமிழக முதல்வர் விளம்பரத்திற்கு செல்லாமல் 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கு, முல்லைப் பெரியாறு ஆக்கப் பூர்வமாக தீர்வு காண வேண்டுமென மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க.,விற்கு ஓர் ராசி உண்டு ஆட்சிக்கு வந்தால் அணைப் பிரச்சினை வரும், அதில் கவனம் செலுத்துவது கிடையாது என்ற கருத்தை முதல்வர் மாற்றிக் காட்ட வேண்டும. முதல்வரின் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன். கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க நடவடிக்கைகள் செய்து அதை 5 மாவட்ட மக்களுக்கு ஓணம் பரிசாக தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இடைக்காலப் பொதுச் செயலாளர் சிறந்த மாணவர் அவருக்கு கட்சியை எப்படி வழிநடத்த வேண்டுமென ஜெயலலிதாவிடம் பாடம் கற்றவர். தி.மு.க., அ.தி.மு.க. விற்கு எப்படி நல்ல கருத்தை சொல்வார்களா?? முரசொலி நாளேடும் அதேத்தான் செய்யும் முன்பே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தவர்கள். அதை நம்புபவன் அடிமுட்டாளாகத்தான் இருப்பான். எங்களின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்.
தி.மு.க., நகைக்கடன் தள்ளுபடி செய்வேன் என சொன்னார்கள் செய்யவில்லை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகையும் வழங்கவில்லை பலத்திட்டங்களை தி.மு.க செயல்படுத்தவில்லை. பல்லி சொன்ன மாதிரி "சுசு சுசு" என சொல்லிக் கொண்டே இருக்கிறேன் நிதி அமைச்சர் தன் செல்வாக்கை பயன்படுத்தி மதுரை மக்களுக்கு நிதியைப் பெற்று திட்டங்களை செயல்படுத்தட்டும் மதுரை மக்கள் மீது பாராமுக காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். மழைக்கு முன் சாலைகளை சீர் செய்யுங்கள் என நான் சேவல் கூவுவது போல கூவு இருக்கேன். பயனில்லை தற்போது மழையால் மக்கள் சாலையில் பயனிக்க முடியாமல் அவதியடைகின்றனர்.
10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பணியாற்றிவிட்டு அரசு அதிகாரிகளுக்கு வேலை செய்வது மறந்துவிட்டார்கள் பயிற்சி கொடுக்க வேண்டுமென்ற நீர்வளத்துறை துரைமுருகன் கருத்திற்கு
இந்த ஆண்டின் சிறந்த ஜோக் அமைச்சர் துரைமுருகன் சொல்வதுதான். அவர் சட்டமன்றத்தில் மூத்தவர் எப்போது நகைச்சுவையாக பேசக் கூடியவர் அப்படித்தான் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்.
அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஓர் தொண்டனாக நீங்கள் ஏற்பீர்களா??
100 ஆண்டுகள் கட்சி இருக்க வேண்டுமானால் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்வதில் தவறில்லை. நாங்கள் தி.மு.கவை போல் வாரிசு அரசியல் செய்யவில்ஜெயலலிதா படமுவில் சாதாரண தொண்டன் தலைவனாக முடியும். தி.மு.கவில் ஆதிதிராவிட தலைமை ஏற்க முடிமா?? தனபால் இருமுறை சபாநாயகராக பணியாற்றினார். கட்சியை காப்பாற்ற வழிநடத்த நல்ல கேப்டன் வேண்டும், அப்படி இருந்தால்த்தான் கட்சியை கொண்டு செல்ல முடியும் அப்படிப்பட்டவரை கேட்பனாக்கி உள்ளோம். இனி வரும் காலங்களில் அதிமுக கட்சித் தொண்டரின் சட்டைப் பையில் எம்.ஜி.ஆர் படம், ஜெயலலிதா படம், எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும் என்றார்.