பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் இருக்கக்கூடிய அவரது முழு உருவ சிலைக்கு பாஜக சார்பில் மாநிலச் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் இந்த நிகழ்வில் எச்.ராஜா மற்றும் திரைப்பட நடிகர் ஆர்.கே சுரேஷ் உட்பட மூத்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 





 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "அற்புதமான ஒரு நாளிலே குறிப்பாக தேவர் பெருமானார் அவருடைய குருபூஜை நாளில் இங்கு கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் கை பாவைகளாக உள்ளார்கள்.



 

 தமிழகத்திற்கு மீண்டும் முத்துராமலிங்கத் தேவர் ஐயா வரவேண்டும். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலையை பார்க்கும்போது அய்யா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நிச்சயம் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.