மதுரையில் மத்திய மாநில அரசுக்கு எதிராக தே.மு.தி.க., சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தே.மு.தி.க., மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார்.






தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்..,”மத்திய மாநில அரசு தற்போது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உயர்வு, மின் கட்டண உயர்வு என தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்தும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது ஜி.எஸ்.டி., வேற உள்ளது ஏற்கனவே  மக்கள் அதிகமான வரியை செலுத்தி வருகின்றனர். மக்கள் வருமானத்திற்கு என்ன வழி என அரசாங்கம் யோசிக்க வேண்டும் அரசாங்கம் என்பது மக்களுக்காக தான்.




தொடர்ந்து கொரோனாவில் இருந்து மக்கள் மீளாமல் உள்ளனர். ஆனால் அரசாங்கத்திற்கு மட்டும் வருமானம் வர வேண்டும் என்பது குறிக்கோளாக இருப்பது தவறு. பேக் செய்த அனைத்து உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., வரி என்பதை ஏற்றுக்கொள்ளப்படாதது எனவே இதற்காக தே.மு.தி.க., சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்காக தான் நானும் மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளேன். மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கான அரசாக அரசாக இருந்தால் அதனை வரவேற்கக்கூடிய விஷயமாக இருக்கும். கேப்டன் விஜயகாந்த் கூறியதுபோல் இந்த விலைவாசி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.




தொடர்ந்து பள்ளி மாணவி தற்கொலை அதிகரித்து வருகிறது என்று கேட்ட கேள்விக்கு.,


தற்போது ஸ்ரீமதி என்கின்ற பெண் இறந்தது எல்லாருக்கும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது அந்தப் பெண் புதைத்த இடத்தில் மண்ணு கூட காயவில்லை. அதற்குள் மனைவிகள் தற்கொலை தொடர்ந்து வருகிறது. இந்தப் பிரச்னை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றினால் மட்டும் போதாது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அந்த மாணவிகள் கொலை செய்யப்படுகிறார்களா? அல்லது தற்கொலையா என முதலில் கண்டுபிடிக்க வேண்டும் இதற்கு தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.


நேஷனல் ஹெரால்ட் அமலாக்கத் துறையினர் விசாரணை குறித்த கேள்விக்கு.,


காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல் வழக்குகளை போட்டனர். தற்போது பா.ஜ.க., ஆட்சியின் போது பழைய ஊழல் வழக்குகளை போடுகிறது. தற்போது யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ முன்னாள் ஆளும் கட்சியாக  இருந்தவர்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவது தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு விஷயம்,  தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்றார்