தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை 152 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுனங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும்.
முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரையில் பருவமழை காலங்களில் நீர் வரத்து வருகையை பொறுத்து நீர்மட்டம் உயர்த்தப்படும். இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது. 219 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2707 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணை நிலவரம்
அதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி செல்லும் வழியில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை நீர்மட்டம் மற்றும் நீர் வரத்தும் குறைந்துள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 65.19 அடியாக உள்ளது. வைகை அணைக்கு வரும் நீர் வரத்து முல்லை பெரியறு அணை, போடி நாயக்கனூர் பகுதியிலிருந்து வரும் கொட்டக்குடி ஆறு போன்றவற்றிலிருந்து வரும் நீர் வெளியேற்றத்தை தொடர்ந்தே வைகை அணையில் நீர் மட்டம் உயரும். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பருவ மழை ஓய்ந்த நிலையில். அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போது வைகை அணைக்கு வினாடிக்கு 230 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 71 அடி, தற்போது 65.19 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
Tamilnadu Roundup: பரபரக்கும் ஈரோடு கிழக்கு! சென்னையில் கொட்டிய பனி - தமிழ்நாட்டில் இதுவரை
மஞ்சளார் அணை நீர் வரத்து
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பரவலாக கன மழை பெய்தது. இந்த நிலையில் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து 250.98 அணையின் நீர்மட்டம் 57 அடியில் இருந்து படிப்படியாக நீர் வரத்து குறைந்து இன்று காலை 8 மணி அளவில் 44.70 அடி நீர் மட்டம் உள்ளது.
சோத்துப்பாறை அணை:
நிலை- 104.30 (126.28) அடிகொள்ளளவு: 66.42Mcftநீர்வரத்து: 5.7கனஅடிவெளியேற்றம்: 25 கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-36.40 (52.55)அடிகொள்ளளவு:4 Mcftவரத்து: 0 கனஅடிவெளியேற்றம்: 14.47 கியூசெக்.