Tamilnadu Roundup: பரபரக்கும் ஈரோடு கிழக்கு! சென்னையில் கொட்டிய பனி - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சிமாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் - 237 வாக்குச்சாவடிகள் அமைப்பு; இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
செங்கல்பட்டில் வழக்கத்தை விட அதிகளவு பனிப்பொழிவு; செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை வரும் மின்சார ரயில்கள் இயக்கத்தில் தாமதம்
அதிகளவு பனிமூட்டம்; டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் தாமதம் - சென்னையில் தரையிறங்க முடியாமல் தவிப்பு
முழு கொள்ளவை எட்டி கடல்போல காட்சி தரும் பூண்டி நீர்த்தேக்கம் - கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பு
தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு எதிரான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் வரும் 12ம் தேதி விசாரணை
ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் விரைவில் மாற்றம்; தற்போதைய வரி விகிதங்களில் மாற்றம் தேவை என்பதை ஏற்பதாக மத்திய நிதிச்செயலாளர் பேட்டி
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்
புகழ்பெற்ற திருப்பதியில் இன்று ரப்த சப்தமி விழா- திருமலையில் குவிந்த பக்தர்கள்
தமிழ்நாட்டில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினரின் ரூபாய் 49 கோடி கடன் தள்ளுபடி - தமிழக அரசு
தமிழ்நாட்டில் 8ம் வகுப்பு வரை பள்ளி இடைநிற்றல் விகிமதம் பூஜ்ஜியம்
பாம்பன் பாலத்தை திறக்க விரைவில் நடவடிக்கை - மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்
ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிய இளைஞரை சுட்டுப்பிடித்த போலீஸ்