முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால் கேரள முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையினை தமிழக பொதுப்பணி துறையினர் விடுத்துள்ளனர்.


IPL Auction 2024: யார் இந்த ராபின் மின்ஸ்? ஐ.பி.எல். ஏலத்தில் ஆச்சரியம் தந்த பழங்குடியின வீரர்! 3.6 கோடிக்கு ஏலம்



தமிழகம் - கேரள எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிவகிரி மலைத்தொடர், முல்லையாறு, முல்லைக்கொடி, தாண்டிக்கொடி, ஆகிய பகுதிகளில் மழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து  நேற்று மதியம் வரையில் 15 ஆயிரம் கனஅடிக்கும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் அணையின் நீர் மட்டம் 138 அடியை ட்டியது. மேலும் அணைக்கான நீரவத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


South TN Rains: வெள்ளப் பாதிப்பில் இருந்து மீளும் திருநெல்வேலி! நெல்லையில் மீண்டும் தொடங்கியது ரயில் போக்குவரத்து!



CSK squad IPL 2024: தட்டித் தூக்கிய சிஎஸ்கே! ஐ.பி.எல். ஏலத்தின் முடிவில் சென்னை அணியில் உள்ள வீரர்கள் யார்? யார்?


152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணை இன்று காலை நிலவரப்படி நீா்மட்டம் 138 அடியாக உள்ளதால் கேரள மாநில முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில், சப்பாத்துக்கடவு, தாண்டிக்குடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அணையின் நீா் இருப்பு 6 ஆயிரத்து 937 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.