தமிழக கேரள எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.

'அமைச்சர் அந்தர் பல்டியா? 2 நாற்காலி, ஒரு மைக் இருந்தால் போதுமா?'- பேரவையில் கொந்தளித்த அமைச்சர் அன்பில்!

தற்போது முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. வழக்கமாக வருடந்தோறும் கோடைகாலங்களில் மழையின் அளவு குறைந்திருக்கும்  ஆதலால் அணையில் நீர் இருப்பும் குறையும்.  தற்போது கோடை காலம்  ஆரம்பமான  நிலையில்  அணையில் நீர்வரத்து  குறைந்துள்ளது. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டாம் போக விவசாயத்தில் நெல் அறுவடை பணிகளும்  நடந்து வருகிறது.

Twitter blue tick: ப்ளூ டிக்கிற்கு காசு கட்டிட்டீங்களா? - சலுகைக்கு நாள் குறித்த ட்விட்டர் நிறுவனம்..!

முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து தேனி மாவட்டம் வைகை அணைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல வைகை அணைக்கு வரும் நீர் வரத்தும் குறைந்துள்ளது. அதாவது வைகை அணையின் நீர் வரத்தாக இருக்கும் மஞ்சலாறு அணை , மூல வைகை நதி உள்ளிட்ட பகுதிகளில் மழை இன்மையாலும் வைகை அணைக்கு வரும் நீர் வரத்தும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீருக்காக திறக்கப்படும் அளவும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

Gold, Silver Price: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்...!

இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டமானது 116.90 (142) அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு  வினாடிக்கு 256 கன அடியாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு 50 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் 2069 கன அடி நீர் உள்ளது. அதே போல வைகை அணையின் நீர் மட்டமானது 53.94 (71) அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு  வினாடிக்கு 72 கன அடியாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு 163 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் 72 கன அடி நீர் உள்ளது.

மற்ற அணைகள் நிலவரம்

ManjalarLevel- 37.05(57) feetCapacity:149.08 McftInflow: 0 cusecOutflow: 0 cusec

Sothuparai dam Level- 41.65 (126.28)feetCapacity: 11.05 Mcft Inflow: 10.2 cusecOutflow: 0cusec


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண