1886 அக்டோபர் 29ஆம் தேதி பெரியார் அணை குறித்த ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானமும், சென்னை ராஜாதானியும் உடன்படிக்கை செய்து கொண்டனர். கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் உள்ள இடம்.  வனவிலங்குகள் நிறைந்த வனம், நச்சுப் பாம்புகள், ஆண்டின் பெரும்பகுதியாக ஓயாமல் பெய்யும் மழை என பல இடையூறுகள் ஏற்பட்டதால் 1887 செப்டம்பர் 21 இல் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை பென்னிகுவிக் இதே தினத்தில் எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அணைக்கான கட்டுமான பணிகள் நடந்தன மழைக்காலத்தில் அங்கு கட்டப்பட்ட அடித்தள பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அணைகட்டும் பணியை தொடர வேண்டாம் என ஆங்கிலேய அரசு பென்னிகுவிக்கிற்கு உத்தரவிட்டது.




இதனால் இங்கிலாந்து சென்ற பென்னிகுவிக் அவருடைய வீட்டில் பெரும் நிலப்பரப்பையும் விற்று பணத்தை சேகரித்து இந்தியா வந்தார். பின் துணிச்சலுடன் ஒரு கோடை காலத்தின் தொடக்கத்தில் அணையை கட்டினார். அதன் பிறகு வந்த பருவ மழை அந்த அடித்தளத்தை தகர்க்கவில்லை. அதன் பிறகு மதராஸ் கவர்மெண்ட் அணைகட்ட பென்னிகுவிக்கிற்கு துணை நின்றது. இந்திய பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பதவிக்கு வந்த முதல் இந்தியரான ஏ வி ராமலிங்க ஐயர் மற்றொரு பொறியாளர்  ஏடி மெக்கன்சி இருவரும் பென்னிகுவித்துடன் பணியாற்றினார். ஏடி மெக்கன்சி எழுதிய ”ஹிஸ்டரி ஆப் தி பெரியார் ரிவார்ட் ப்ராஜெக்ட்” என்னும் நூலில் அணை கட்டியது குறித்தும் பென்னிகுவிக்கிறகு ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.




அதில் மணலும், சுண்ணாம்பும் கலந்து சுர்க்கிகளை உருவாக்கி சிறு சூளைகளில் வைத்து சுட்டெடுக்கப்பட்டது. நான்கு அங்குல சதுரத்தில் ஒரு அங்குல கணத்தில் உள்ள கற்கள் 3 பங்கு மணலும் இரண்டு பங்கு சுண்ணாம்பு ஒரு பங்கு சுர்க்கியும்  சேர்த்து கலவை தயாரிக்கப்பட்டது. கருங்கல்லை ஆறு அங்குல கணத்தில் உடைத்தெடுத்து அடுக்கி வைத்து சுர்க்கியும் கலவையும் உபயோகித்து அணை கட்டப்பட்டது. வெளியில் காணப்படுகின்ற கருங்கற்கள் கீழிருந்து 120 அடி உயரம் வரை சிமெண்ட் பூசப்பட்டுள்ளது. இறக்குமதி செய்த சிமெண்ட் தான் இதற்கு உபயோகப்படுத்தப்பட்டது. அணைக்கட்டும் இடத்திற்கு தேவையான பொருட்களையும் தேவையான உபகரணங்களையும் கொண்டு வர சாலையானது, நீர்வழி ,ரோப்வே, ரயில்வே முதலிய வழிகளை பயன்படுத்தினர்.  90 அடி நீளம் உள்ள தேக்கு மரங்களை வெட்டி யானைகள் மூலம் எடுத்து வரச் செய்து ரோப்வே உருவாக்கப்பட்டது. உருவாக்குவதற்கான தூண்கள் பதிக்கப்பட்டன.




மலையில் இருந்து தேக்கடி வரை ரோப்வே அமைத்து அதில் பக்கெட்டுகளை கட்டிவிட்டு சுண்ணாம்பு கட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. 90 அடி உயரத்தில் உள்ள ரோப்வேயின் தூண்களை பதித்து மிகவும் சிரமமான வேலையாக இருந்தது.  அணை கட்டுவதற்காக வெள்ளத்தை தடுத்து நிறுத்தியது என்பது சாகசம் நிறைந்த வேலையாய் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த நூலில்.  இவ்வளவு சிரமத்துடன் ஐந்தாயிரம் தொழிலாளர்களை தொடர்ந்து பணி செய்தனர் . இதனால் 1895இல் முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.


அன்றைய கணக்கின்படி பெரியார் அணைக்காக மொத்த ரூபாய் 81.30 லட்சம் செலவு செய்யப்பட்டது. மதராஸ் கவர்னர் வென்லாக் தலைமையில் 1895 அக்டோபர் 10ல் முல்லைப் பெரியார் அணை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அவர் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதம் என பெரியார் அணையை சிறப்பித்துள்ளார். அந்தப் பென்னிகுவிக் என்னும் மாமனிதனால் உருவாக்கப்பட்ட பெரியாறு அணை என்னும் அதிசயத்திற்கு அடித்தளம் கல் நடப்பட்ட  நாள் இன்று இதனை தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மறக்காமல் தற்போதும் இந்நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.