தமிழகத்திலும், கேரளாவிலும் ஒவ்வொருவருடைய உணவிலும் தேநீர் ,காபி, வடை மூன்றுக்குமே பெரும் பங்கு இருக்கும்னு சொல்லலாம். ஏன் சில பேருக்கு இந்த டீ, காபி, வடை மட்டும்தான் உணவுன்னு கூட சொல்லலாம். ஏனா நிறைய பேர் சரியா டைமுக்கு  சாப்பிடுறதும் இல்ல. அப்படி சாப்பிடுறதுக்கான நேரமோ, பொருளாதார சூழலோ கூட இருக்குறதில்லை. வேலைக்கு போற இடமோ, இல்ல வெட்டியா சுத்துர இடமோ போன இடங்களில் ஏதோ ஒரு டீ, வடையை சாப்டுட்டு  அடுத்தடுத்த பயணங்களில் ஓடிக்கொண்டேதான் இருக்காங்க.


என்ன டீ, காபி, வடை சாப்டுறதுக்கு, ஒரு கதைய சொல்றியான்னு கேக்குறீங்களா? அப்படி இந்த டீ, காபி சாப்பிடுவது உடம்புக்கு கேடுனு ஒரு டீக்கடைக்காரர் டீ கடையிலேயே எழுதி வைத்திருப்பது ஆச்சரியத்த ஏற்படுத்தியது. காலையில் எந்துருச்ச உடனே காபி ,டீ வடை வியாதிக்கு முதல்படின்னு போட்டு அந்த வசனத்துக்கு கீழேயே நின்னு  டீ ஆத்துர டீக்கடையை பார்க்கிறது கொஞ்சம் சிரிப்பாவும் இருக்கு. அதே நேரத்தில் யோசிக்கவும் வைக்கிது. இந்த வசனம் குறித்து டீக்கடைக்காரர்கிட்ட நாம கேட்டபோது, ஆமாங்க இந்த டீ கடை இருக்குற பகுதி சுத்தியும்  கிராமம் மட்டும்தான் இருக்கு. இந்த கிராமத்துல இருக்கவங்க பெரும்பாலும் விவசாயம் மட்டும்தான் செய்றாங்க.



இந்த டீ கடை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில  ஒரு  பிரபலமான  டீக்கடையாவும் இருக்கு. காலையில எந்திரிச்சு தோட்ட வேலைகளுக்கு விவசாயத்துக்கும் போறவங்க வெறும் வயித்துல வந்து டீயும், வடையும் சாப்பிட்டுட்டு வேலைக்கு போறாங்க. அப்படி போகும்போது அவங்க உடம்பு ரொம்பவே கெட்டுப்போகுறது நமக்கு தெரியுது. நாம ஒரு டீக்கடை வச்சு வியாபாரம்தான் பண்ணனும். அதுல ஒரு நல்ல நோக்கமும் இருக்கணும். அடுத்தவங்களுக்கு தீங்கான ஒரு பொருளை நாம் கொடுக்கும்போது, அவங்களுக்கு தெரிஞ்சே செய்வது நமக்கு மனசு உறுத்துதுனு சொல்றாரு டீ கடைக்காரர். அதனால காலையில சத்தான உணவை சாப்பிட்டுட்டு போவாங்கன்னு ஒரு நல்லெண்ணம்தான் என்றார்.




டீ , காபி , வடை சாப்பிடவே கூடாதுன்னு சொல்லலங்க.. வெறும் வயித்துல டீ, வடை, காபி சாப்பிடாதீங்கன்னுதான் சொல்றேனு சொல்றாரு இந்த டீ கடைக்காரர். உணவு விடுதிகள் , இதுபோன்ற டீ கடைகள் வச்சுருக்கவங்க லாபம் கிடைச்சா போதும்னு எதயாவது விக்குறவங்களதான் பாக்கமுடியும். ஆனா செய்யுற தொழில் நமக்கு பிடிச்சு செய்யணும். அதுக்குள்ளயும் நேர்மையான காரணங்களுக்காக செய்யணும்னு நினைக்குற டீக்கடை அண்ணனுக்கு சல்யூட்.


 


முறுக்குல இத்தனை வெரைட்டியா! : முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku