காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை - அமைச்சர் ஐ. பெரியசாமி

காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல்  என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக - திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி

Continues below advertisement

திண்டுக்கல் மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட ஜேசிபி இயந்திரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் திண்டுக்கல் மேற்குரத வீதியில் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ 30 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,

Continues below advertisement


திமுக கூட்டணியில் இருப்பதற்காக நாம் கூனி, குறுகிப் போக தேவையில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள். கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்திய கூட்டணியை உருவாக்கி 40க்கு 40 வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்துள்ளோம்.

Paris Olympic: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அதிக வயது, இள வயது இந்தியர் யார்? யார்? ஓர் அலசல்


கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல்  என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக. அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் உழைப்பால் உயர்ந்த தலைவர்கள். அந்த தலைவர்கள் தற்போது கல்விக்காக அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.


அந்த அடிப்படையில் அதிகமான பள்ளிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கல்வி நிலையங்களை உருவாக்கி கல்விக்கு மிகப்பெரிய உயர்வையும், பெருமையும் சேர்த்துள்ளனர். பழனி நகராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகியோருக்கு இடையே உள்ள பிரச்சனை குறித்த கேள்விக்கு பழனியில் கிரிவலப் பாதை மக்களின் வசதிக்காக ஒழுங்கு படுத்தி உள்ளனர். மற்ற தெருக்களை நிர்வாகம் சுத்தமாக, சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என அறநிலையத்துறை விரும்புகிறது.

Deadpool & Wolverine Review: அட என்னப்பா இப்படி பண்றாங்க! டெட்பூல் & வோல்வரின் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

தற்போது வியாபாரிகளை, பொதுமக்களை அழைத்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதன் மூலம் பேசி தீர்வு காணலாம் என்ற முடிவை இன்று எட்டி இருக்கிறது. அதனால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை.யாராக இருந்தாலும் மாநகராட்சி, , ஊராட்சி திட்டங்களில் அவர்கள் சொல்லுகின்ற பொழுது அதனை காது கொடுத்து கேட்டு அதனை நிவர்த்தி செய்யக் கூடிய அரசு நம்முடைய அரசு எனத் தெரிவித்தார்.

Continues below advertisement