2017 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை இல்லை, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது, தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஜல்லிக்கட்டு போட்டி இணைந்தது அல்ல என்ற கருத்தை ஏற்க முடியாது எனக்கூறி தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை தமிழகத்தில் அரசியல் கட்சியினர் எந்த மாறுபாடின்றி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.


 





உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழர்களின் பழமையான பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஏறுதழுவுதல் போட்டிக்கு அனுமதி அளிக்கும் தமிழக சட்டத்தின் அம்சத்தை உறுதி செய்து உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை வரவேற்பதாகவும்,

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் இந்த வரலாற்று மற்றும் கலாச்சார நடைமுறை எந்த தடையும் இல்லாமல் தொடரும் எனவும், 



 

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த ஆண்டின் தொடக்கத்தில், எனது குடும்பத்துடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டையும், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சரவையை சேர்ந்த  அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண