2047 ஆம் ஆண்டு இந்தியா அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது தான் பிரதமர் மோடியின் இலக்கு என்று தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டு பேசினார்.


உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ




தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண் தொழில் முனைவோருக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையம் கட்டிடம் திறப்பு விழா மற்றும் பெண் விவசாயிகள் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு கூட்டம் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்து பின் விவசாயிகள் மற்றும் பெண்கள் சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய சார்ந்த பொருட்களை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Breaking News LIVE 8th Nov 2024: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்




பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் எல்.முருகன், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் விவசாயம் சார்ந்த பொருட்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். 11 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுத்து வருகிறார். 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கு உருவாக்கி மத்திய அரசின் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்க பெற செய்துள்ளார்.


தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி




உள்ளூர் விவசாயிகள் தயாரிப்பில் உருவாகும் விவசாய பொருட்கள் ஆண்டிப்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை செல்கிறது. 2047 ஆம் ஆண்டு இந்தியா அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது தான் பிரதமர் மோடியின் இலக்கு என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.