தென் மாவட்ட பயணத்தில் தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர்

 

தமிழக அரசியல், ரேசில் தி.மு.க., அ.தி.முக., த.வெ.க., நா.த.க., பா.ஜ.க., வி.சி.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., அமமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என பல அரசியல் கட்சிகள் உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க.,வே அதிகளவும் விமர்சனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு ஆதரவு நிலைப்பாட்டில் பல இடங்களில் தமிழக ஆளுநர் ஸ்கோர் செய்து வருகிறார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி பி.ஜே.பி., கட்சிக்காரர் போல் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆர்.என்.ரவி ஆகிய இருவரும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


 

தமிழக முதல்வர் விருதுநகர் - தமிழக ஆளுநர் இராமநாதபுரம் பயணம்

 

விருதுநகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 11.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வருகிறார். அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதியம் 1 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொண்டு தொடர்ந்து ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவி இருவரும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை சென்னை செல்வதற்காக ஒரே விமானத்தில் மதுரையில் இருந்து 1:50 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டு செல்கின்றனர். தற்போது வரை இந்த தகவல் சொல்லப்பட்டு வருகிறது.