இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும் எனவும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 07.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி சந்திப்பு, போத்தனுார் சந்திப்பு, கோயம்புத்தூர் சென்றடையும் எனவும், இந்த ரயிலில் , இரண்டு ஏசி 3-அடுக்கு பெட்டிகள், ஒன்பது தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், இரண்டு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு கம் லக்கேஜ்/பிரேக் வேன் மாற்றுத் திறனாளிகளுக்கான தங்குமிட வசதி பேட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video: பாரம்பரிய முறைப்படி நெல் மூட்டைகளை மாட்டுவண்டியில் கொண்டு வந்த விவசாயிகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்