டிஜிட்டல் உலகில் உட்கார்ந்த  இடத்திற்கே உணவு பொட்டலங்கள் ஆன்லைன் உதவியால் தேடி வருகிறது. இந்த நவீன காலகட்ட,  சூழலில் வாழும் நமக்கு அவ்வப்போது தற்சார்பு வாழ்வியல் வாசம் வீசும் போது மனம் மகிழத்தான் செய்கிறது. அப்படியாக விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை பாரம்பரிய முறைப்படி இரவில், மாட்டு வண்டியில் கொண்டு செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


 





தூங்கா நகரமாக பெயர் பெற்ற மதுரையில் இரவிலும் தொழில் சார்ந்து இயங்கும் பழக்கம் தற்போதும் இருக்கிறது. இந்நிலையில் மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயலில் விளைவித்த நெல்லை லாரியிலோ மற்ற பிற வாகனங்களில் அனுப்பி வைக்காமல் தங்களிடன் இருக்கும் மாட்டுவண்டி மூலமே கொண்டு சென்றனர். அதன்படி மாலை நேரதில் பொதும்பு கிராமத்தில் இருந்து கிளம்பி இரவு மாட்டுத்தாவணி அருகே உள்ள நெல் கொள் முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே சென்ற போது இதனை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றம், செய்யவும் வீடியோ வைரலாக மாறி வருகிறது. இது போன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மாட்டு வண்டிகளை பல்வேறு தேவைக்காக பயன்படுத்தியதாக தெரியவருவது மகிழ்ச்சியே.