மஞ்சளார் அணையின் நீர் மட்டம் 55 அடியை எட்டியதால் தேனி திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து நீர்வளத் துறை அறிவித்துள்ளாது.




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் அமைந்துள்ளது தான் இந்த மஞ்சளார் அணை, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பெருமாள் மலை,  பாலமலை, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 51 அடியை எட்டிய நிலையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும்  மற்றும் 53 அடியை எட்டிய போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த நிலையில்,


சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி




கடந்த இரண்டு தினங்களாக மீண்டும் அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் அதன் முழு உயரமான 57 அடியில் 55 அடியாக நீர்மட்டம் எட்டியதால்  தேனி மாவட்டத்தின் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான பரசுராமபுரம் தும்மலபட்டி, ஊத்தங்கல் புதுப்பட்டி, வத்தலகுண்டு, விருவிடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வளத்துறையினர் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட க வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி




Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? - சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்


தற்பொழுது அணையின்  நீர் இருப்பு 435.32 மில்லியன் கண அடியாகவும் அணையின் நீர்மட்டம் 55 அடியாகவும் உள்ளது  அணைக்கு விநாடிக்கு  94 கன நீர்வரத்து உள்ளதால்   அணைக்கு வருகிற 94 கன அடி நீர் உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.  எனவே மஞ்சளார் ஆற்றங்கரையோர தேனி திண்டுக்கல் மாவட்ட கிராம மக்கள் ஆற்றைக் கடக்கவும் ஆற்றில் குளிக்கவோ எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என நீர்வளத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.