சிவகங்கையில் புல்லட் ஒட்டியதாக கூறி பட்டியிலன கல்லூரி மாணவர் தாக்கப்பட்டத்தை கண்டித்து வி.சி.க., சார்பில் மதுரை காந்திமியூசியம் சாலையில் புல்லட் பேரணி நடைபெற்றது.
பட்டியலின கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி (19) என்ற பட்டியலின கல்லூரி மாணவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆயுதங்களால் தாக்கி கைகளில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து 17ஆம் தேதியன்று தேசிய SC/ ST ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
புல்லட் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டனர்
இந்நிலையில் கிராமத்திற்குள் புல்லட் ஓட்டியதால் பட்டியலின கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற பகுதியிலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை சமத்துவ புல்லட் பேரணி நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் வி.சி.க சட்டமன்ற உறுப்பினரும், பொதுச்செயலாளருமான சிந்தனை செல்வன் பேரணியை தொடங்கிவைத்து புல்லட் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் புல்லட் ஓட்டியபடி கலந்துகொண்டு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். புல்லட்டில் கல்லூரிக்குச் சென்ற மாணவனின் கையை வெட்டியுள்ளனர். இதற்கு எதிராக அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்ட சமூக நீதிப் புல்லட் பேரணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களும் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சமத்துவ சிந்தனையோடு நடந்து கொள்வதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து பிரச்னைகளையும் வரட்டுத்தனமாக சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்கும் நிலை உருவாகும்.
அன்புமணி கூறிய கூற்று நம்பிக்கை அளிக்கிறது ஆனால்
விசிக கொடி கம்பம் தாக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சிந்தனை செல்வன்..,” 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒற்றுமையைபெற முழங்கியது பா.ம.க., இன்று திசைமாறி தலித்துகளுக்கு எதிரான வன்மைத்தை உமிழ்வது வேதனைக்குரியது. விசிக கொடி தாக்குதல் தொடர்பாக பாமகவினருக்கு அன்புமணி கூறிய கூற்று நம்பிக்கை அளிக்கிறது என்றாலும், வெளிப்படையாக அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். பாமக தலைவர் ராமதாஸ் அவரது தோட்டத்தில் காரல் மார்க்ஸ், அம்பேத்கர், தந்தை பெரியாரின் சிலைகளை வைத்துள்ளார். அவைகள் அடையாள அரசியலாக இல்லாமல் அடித்தட்டு மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துகிற அரசியலாக அமைய வேண்டும்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுவுக்கு அடிமை.. மதுரை அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அரசுப் பள்ளிக்காக ரூ.1 கோடி சொத்தை கொடுத்த தம்பதி.. மதுரையில் மீண்டும், மீண்டும் முளைக்கும் மாணிக்கங்கள் !