வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதி, மூல வைகை, கிளை நதி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் வைகை அணையில் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியது. இதன் காரணமாக நேற்று இரவு வைகை ஆற்றில் இருந்து 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வைகை ஆட்சி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிம்மக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது.



 





வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றினுள் இறங்கவோ, குளிக்கவோ புகைப்படம் எடுக்கவோ இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 





தண்ணீர் அதிகம் வந்த காரணத்தால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீரானது அதிகளவு வந்ததால் சாலையில் நீர் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 



 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர