மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு ஏசி பேருந்து மழை நீர் ஒழுகுவதாக குற்றச்சாட்டு - சுகாதாரமற்ற நிலையில் படுக்கைகள் இருப்பதாகவும் பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு.
ஜன்னல் வழியாக மழை நீர் பேருந்துக்குள் ஒழுகுகிறது
காலாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து சென்னைக்கு செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு ஏசி பேருந்தில் சென்னை சென்ற போது மழை பெய்ய தொடங்கிய நிலையில் ஜன்னல் வழியாக மழை நீர் பேருந்துக்குள் ஒழுகுவதாகவும் பேருந்தில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், படுக்கைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி பயணி ஒருவர் வீடியோ வெளியீட்டு தனது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
மேலும் ஏசி வாகனத்தில் இதுபோன்ற மழைநீர் ஒழுகும் போது ஏசியில் பிரச்னை ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார். பணம் கொடுத்து அரசு பேருந்தில் பயணிக்கும் போது இது போன்று சுகாதாரமற்ற முறையில் படுக்கைகள் இருப்பதாலும், மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.