தைப்பூசம், தை பெளர்ணமி திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோயில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மதுரை டி.வி.எஸ்., நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை தெரு பகுதியைச் சேர்ந்த சேதுபதி - மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்பு செல்வம், தமிழரசன் இருவருக்கும் திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அன்புச் செல்வம் ஜனனி ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது நித்ரா ஸ்ரீ(8). ராட்சன ஸ்ரீ(7) என 2 மகள்கள் ஒரு மகன் என 3 குழந்தைகள். அதேபோல் தமிழரசனுக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தாரணி ஸ்ரீ (3) வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று கூட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் தைப்பூச தினத்தை முன்னிட்டு நேற்று காலை சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர்.
காலை கோவில் அருகே இருந்த ஒரு சிற்றுண்டி கடையில் ஐஸ்கிரீம் வாங்கி குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர். அதில் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது இதை கண்ட குழந்தை நித்ரா ஸ்ரீ தந்தை அன்பு செல்வத்திடம் கூறவே உடனடியாக குழந்தையை அருகில் இருந்தால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
உடனடியாக 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களுக்கு அங்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிற்றுண்டி கடையில் தவளை உயிரிழந்த நிலையில் கிடந்த ஐஸ்கிரீமை உண்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: காளையார் கோவிலில் யானை மேல் மன்னர் உலா வரும் 15ம் நூற்றாண்டு சிற்பம் கண்டெடுப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்