மதுரையில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த இளைஞர் ஆன்லைன் ரம்மியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஆன்லைன் ரம்மியால் கல்லூரி படிப்பையே பாதியில் விட்டு வேலைக்கு சேர்ந்த இளைஞர் பண இழப்பால் உயிரிழந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முள்ளாகாடு பகுதியை சேர்ந்த (மகாலட்சுமி - முத்துராமன்) தம்பதியினருக்கு மூன்று ஆண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு தாய் மகாலட்சுமி உயிரிழந்த நிலையில் தந்தை முத்துராமன் வேறொரு திருமணம் செய்து தனியாக வசித்துவந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினரின் பிள்ளைகளான குணசீலன்(26), பசுபதி(25), கமல் (23) ஆகிய மூன்று பேரும் பாட்டி தமிழரசி என்பவரது பராமரிப்பில் வளர்ந்துவந்துள்ளனர். இந்நிலையில் குணசீலன் கல்லூரியில் பட்டபடிப்பு 3ஆவது ஆண்டு படித்துவந்துள்ளார். அப்போது அவருக்கு செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து தம்பி பசுபதி அண்ணன் குணசீலனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க கொடுத்துவிட்டு மதுரை அண்ணாபேருந்து நிலையம் பகுதியில் உள்ள நியூ மாஸ் என்ற உணவகத்தில் பணிபுரிவதற்காக அழைத்துவந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த குணசீலன் கடைசி செமஸ்டர் முடிக்காமலயே ஓட்டலில் வேலை பார்க்க வந்து கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்துவந்துள்ளார். அப்போதும் அவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து வந்துள்ளார். இதேபோன்று தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் கடனை வாங்கி அதன் மூலமாகவும் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகளவிற்கான பணத்தை இழந்துவிட்டதாக தனது சக பணியாளர்களிடம் தெரிவித்துவிட்டு மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் மதுரை மாநகர் தாசில்தார் 1வது தெரு சாத்தமங்கலம் பகுதியில் தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து தம்பி பசுபதி நேரில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதனையடுத்து அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: காளையார் கோவிலில் யானை மேல் மன்னர் உலா வரும் 15ம் நூற்றாண்டு சிற்பம் கண்டெடுப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்