மதுரையில் தனியார் அரங்கில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.கஸ்டாலின் முன்னிலையில் ரூ.37-ஆயிரம் கோடி முதவீட்டில் 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

மதுரை ரூ.150 கோடி மதிப்பீட்டில் பாலம்
 
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின், நேற்றிரவு மதுரை வந்தார். இந்நிலையில் முதல்நிகழ்ச்சியாக திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து மதுரை அண்ணாநகர் - மேலமடை சந்திப்பில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கிறார். இந்த பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
 
ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு
 
 இதைத் தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடக்கும் பல்வேறு தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். "தமிழ்நாடு வளர்கிறது" -எனும் தலைப்பில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025-ல் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் ரூ.36,660,35 கோடி மதிப்பீடுகளில் செய்யப்படவுள்ளன. இவற்றின் மூலம் 56,766 இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன்பின்னர் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தங்குடி கலைஞர் திடலில் நடக்கும் அரசு நலத்திட்ட  உதவிகளை வழங்கிகும் முதல்வர்பயனாளிகளுக்கு வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
 
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் - சிப்காட் அடிக்கல்
 
மேலும், மதுரை மாவட்டத்தில் ரூ.3.065 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 63 திட்டப் பணி களை திறந்து வைக்கிறார். ரூ.17.17 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 1,41,049 பயனாளிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 63.698 பேருக்கு பட்டாக்களும், பல்வேறு துறைகள் சார்பாக 77,351 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறார். தொடர்த்து, மதுரை மேலூர் வஞ்சிநகரம் சிப்காட் தொழிற்பூங்கா விற்கு அடிக்கல் நாட்டுகிறார். முல்லை பெரியாறு லோயர் கேம்பில் இருந்து ரூ.2,070.69 கோடியில் மதுரை மாநகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை மதுரை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மதியம் விமானம் மூலம் சென்னை கிளம்புகிறார்.