மதுரை மேலமடை பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயர் வைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
மதுரை வேலுநாச்சியார் பாலம்
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியும், வக்கீலுமான தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது...,” மதுரை - சிவகங்கை சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணியை கடந்த 2023-ம் ஆண்டில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது இந்த பாலம் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. அதனை தொடர்ந்து வருகிற 7-ம் தேதி (நாளை) முதல்-அமைச்சர் மேலமடை மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் இந்திய வரலாற்றில் மதுரை மண்டலத்தை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் சாதனை அளப்பரியது. இன்றும் மதுரையில் எங்கு தோண்டினாலும் பாண்டியர்களின் தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.
இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆகவே மேலமடை மேம்பாலத்திற்கு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரை சூட்டுவது சாலச் சிறந்தது. எனது மனுவின் அடிப்படையில் மேலமடை மேம்பாலத்துக்கு பாண்டியர்கள் பெயர் சூட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, மேலமடை மேம்பாலத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து ஏற்கனவே உரிய முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல என தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.