தமிழகம் முழுவதும் ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பால் 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பால் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய தயிர், நெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ள சூழலில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தப்படவில்லை எனவும், கடந்த 4 ஆண்டுகளாக பாலின் கொள்முதல் விலையில் 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை முன் வைத்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டி இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி கிராமங்களில் அடுத்தடுத்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 





50க்கும் மேற்பட்ட கரவை மாடுகளுடன் நூற்றுக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.





 

பருத்திக்கொட்டை, தவிடு, கலப்பு தீவனம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கால்நடை தீவன உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென, பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த, 2019க்கு பின், பால் விலையை உயர்த்தி வழங்கவில்லை. தற்போதைய விலைவாசி உயர்வை சமாளிக்க, பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி கொடுக்க வேண்டும். கலப்புதீவனம் மானிய விலையில் வழங்க வேண்டுமென, பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 


 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண