மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமனாதாக கூறப்பட்ட நிலையில் அவர் மாயமானதாகவும், கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்தநிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகூர் ஹனிபாவை தேடி வந்தநிலையில். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர் கூறுகையில்," மயக்கமான நிலையில் சிறுமியை மூன்று நபர்கள் ஆட்டோவில் அழைத்து வந்தனர். தூக்கத்தில் இருக்கும் என நினைத்தோம். பின்னர் மேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் சிறுமியின் உடல் மோசமாக உள்ளது என தெரிவித்தனர். இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம். எங்களுடைய பெண்ணுக்கு நீதி வேண்டும்" என்றனர்.


தொடர்ந்து, மதுரை காவல்துறை எஸ்.பி பாஸ்கரனிடம் பேசினோம். அப்போது அவர்கள், " கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தன்று இளம் பெண்ணும் - நாகூர் கனி (29) என்ற நபரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். மதுரையில் இருவரும்  வீடு எடுத்து தங்கியுள்ளனர். பின் அங்கிருந்து ஈரோட்டிற்கு சென்று வாழமுடிவு செய்து அங்கே தங்கியுள்ளனர். இளம்பெண்ணின் உறவினர்கள் தேடியதாலும், இளம்பெண் மேஜர் இல்லை என்பதாலும் திரும்பி வந்துவிடக் கூறி நாகூர் ஹனிபாவின் உறவினர் வீட்டில் தெரிவித்துள்ளனர்.


இதனால் பதட்டத்தில் இருவரும் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளனர். அப்போது நாகூர் ஹனிபா எலிபேஸ்ட் சாப்பிடும் போது அந்த இளம்பெண் தட்டிவிட்டுள்ளார். ஆனால் சிறுமி முழுமையாக எலிபேஸ்ட்டை துப்பவில்லை. இதனால் திருப்பூர் மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். உடல்நிலை தேரியதாக நினைத்து இளம் பெண்ணை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இளம்பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நாகூர் ஹனிபா மற்றும் அவரது உறவினர் நண்பர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது. முழு விசாரணைக்கு பின் முழு தகவல்கள் தெரியவரும் " என தெரிவிக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண