மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம்  மானாமதுரை நோக்கி இனோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.   லாடனேந்தல் அருகே உள்ள மாரநாட்டு கால்வாயில் முழு அளவு தண்ணீர் சென்று  கொண்டிருந்த சமயத்தில் நிலை தடுமாறிய அந்த கார் இறங்கியது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் வண்டியோடு தண்ணீரில் தத்தளித்த 3 பெரியவர்கள், 2 குழந்தைகளையும் தண்ணீரில் குதித்து தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றானர். இந்த செயல் பலரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. இதனால் முத்துக்கிருஷ்ணனுக்கு பலரும் முகநூலில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 




 

இது குறித்து முத்துக் கிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், எனக்கு சொந்த ஊர் திருப்புவனம் மதுரையில் ஓட்டுநராக வேலை செய்கிறேன். வேலை விசயமாக காரில் ராமநாதபுரம் வரைக்கும்  சென்று கொண்டிருந்தோம். அப்போது மாரநாடு கால்காய் அருகே வேகமாக வந்த கார் மாயமானது. வண்டியை நிறுத்தி பார்க்கும் போது தான் கால்வாய்க்குள் விழுந்தது தெரியவந்தது. காரில் 2 குழந்தைகள் ஒரு பெண், முதியவர் என மொத்தம் 5 நபர்கள் இருந்தனர். இதனால் தண்ணீரில் குதித்து அனைவரையும் காப்பாற்றினேன். அவர்களை உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம். தற்போது அவர்களிடம் பேசினேன், அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்" என நம்மிடம் தெரிவித்தார்.


 

காரில் மூழ்கிய இனோவா காரில் இருந்து குழந்தைகள், முதியவர் உட்பட 5 நபர்களின் உயிரை மற்றொரு வாகன ஓட்டுநர் காப்பாற்றிய செயல் பாராட்டைப்பெற்றுள்ளது.