எம்.ஜி.ஆர் காலத்தில் 47 லட்சம், ஜெயலலிதா காலத்தில் ஒன்றை கோடி, எடப்பாடி காலத்தில் 2 கோடிக்கு மேல் தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக அ.தி.மு.க.,வை உருவாக்கிய உள்ளார் இபிஎஸ் என மதுரையில் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

 

அமைதிப் பேரணி


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக மதுரையில் முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூ தலைமையில் நேதாஜி சாலை ஜான்சிராணி பூங்காவில் துவங்கி மேலமாசி வீதி வழியாக சுமார் 1500 மீ தூரம் உள்ள மேற்கு - வடக்குமாசி சந்திப்பு வரையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், அ.தி.மு.க., தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அமைதி பேரணியில்  தொண்டர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பின்னர் உறுதிமொழி எடுத்துகொண்டார். பின்னர் அனைவரும் கையில்  மெழுகுவர்த்தி ஏந்தி ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

 


பொம்மை ஆட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.



தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “இன்றைக்கும் தாய்மார்கள் மனதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைந்து இருப்பதை காண முடிகிறது. விடியா திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக விஷ சாராயம் மரணங்கள், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது, மது தமிழகத்தில் ஆறாக ஓடுகிறது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என தெரிவித்த இன்றளவும் ரத்து செய்யாமல் பொம்மை ஆட்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு, மற்ற மாநிலங்களும் தமிழகத்தின் திட்டங்களை பின்பற்றினார்கள். எடப்பாடி ஆட்சியின்போது சமூக ஆர்வலர்கள் என்று சொல்லி கொண்டவர்கள் ஆட்சியின் மீது பல்வேறு குறைகளை கூறி வந்தவர்கள் இன்றைக்கு எங்கு உள்ளார்கள் என்று காணவில்லை. தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் அலங்கோல ஆட்சியை கண்டிக்க ஆள் இல்லை. இருந்தபோதிலும் தமிழ் நாட்டு மக்களின் மனநிலை மாறி உள்ளது. மக்களின் எழுச்சி காரணமாக வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க உறுதிமொழி ஏற்று உள்ளோம்.

 

எதிரணியில் அம்மாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தினாலும், உண்மையான ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம் என  டிடிவி,ஒபிஎஸ் ட்விட் குறித்த கேள்விக்கு;

 

எல்லோரும் சொல்லலாம், சொல்ல தகுதி படைத்தது அ.தி.மு.க., தான். அதன் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். நிர்வாக திறமை கொண்டு ஆட்சி அமைக்கும் திறன் கொண்டவராக எடப்பாடி திகழ்கிறார். அவர் பின்னால் தான் கழகத் தொண்டர்கள் அணி திரண்டு உள்ளனர். எம்.ஜி.ஆர்., தலைமையில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். ஜெயலலிதா தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள்.  இன்றைக்கு எடப்பாடி யார் தலைமையில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள்  இருக்கும் மாபெரும் இயக்கமாக உருவாக்கிக் காட்டியவர் எடப்பாடி தான். எடப்பாடியாரைத்தான் மக்கள் ஏற்றுக் கொண்டு வரவேற்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர ஒரே தகுதி எடப்பாடியாரிடம் தான் உள்ளது” என தெரிவித்தார்.