ஓரணியில் தமிழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம், என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய கின்னஸ் நகைச்சுவையாக உள்ளது என முன்னாள் அமைச்ச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் செய்துள்ளார்.
ஆர்.பி.உதயகுமார்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,” தமிழகத்தில் 39,202 ஏரிகள் உள்ளது. இன்றைக்கு தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த ஏரிகள் எல்லாம் அவர்களிடம் இருந்து பாதுகாக்க முடிகிறதா? என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகால எடப்பாடியார் ஆட்சியிலே குடிமராமத்து திட்டத்தின் மூலம் 1132 கோடியில் 5,586 நீர்நிலைகளை தூர்வாரினார். 84 ஆண்டுகளுக்கு பின்பு மேட்டூர் அணையை தூர்வாரி சாதனை படைத்தார். அதே போல கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் போல நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் செயல்படுத்தி, அதன் மூலம் ஆற்றில் வரும் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட்டு அதை மீண்டும் காவிரி ஆற்றிலே செயல்படுத்தும் வகையில் திட்டத்தை கொண்டு வந்தார். ஜனாதிபதியின் உரையில் கூட இடம் பெற்றது. எடப்பாடியாரின் தலைமையிலே அந்த திட்டம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் தற்போது மத்திய அரசு அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அண்டாவை காணோம் - குண்டாவை காணோம்
பல ஏரிகள், கண்மாய்கள் நீர்வரத்து காணவில்லை. அண்டாவை காணோம் ,குண்டாவை காணோம், கிட்னியை காணோம் என்பது போல இன்றைக்கு ஆறுகள் காணவில்லை, நீர்வழிப்பாதைகள் காணவில்லை. மொத்தத்தில் திமுக ஆட்சியிலே என்ன நடக்கிறது, என்று முதலமைச்சருக்கு தெரிகிறதா? தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறாரா? - என்பது புரியாமல் உள்ளது.
திமுக தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்
இன்றைக்கு 2 கோடி பேர்களை உறுப்பினராக சேர்த்து உள்ளோம், வாக்காளர்கள் 30 சகவீதம் பேரை சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அதற்காக அவசியம் என்ன? ஏனென்றால் இன்றைக்கு கட்சி பலவீனம் அடைந்து விட்டது, தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள், அதேபோல ஸ்டாலின் திமுக அரசு மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டது, ஆக கட்சிக்காரர்கள் நம்பிக்கை பெறுவதற்கும், மக்கள் நம்பிக்கை பெறுவதற்கும் நாங்கள் இரண்டு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்த்து விட்டோம் என்று கூறுகிறார்கள் நான் விமர்சனம் செய்வதற்காக நான் கூறவில்லை.
உதயநிதி ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய கின்னஸ் நகைச்சுவை
ஸ்டாலினுக்கு நிர்வாகதிறமை இல்லாத காரணத்தால், 75 ஆண்டு கால கட்சிக்கு இன்னைக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது, என்பது மக்கள் கருத்தாக உள்ளது. ஓரணியில் தமிழகம் என்று இரண்டு கோடி அல்ல, நீங்கள் 10 கோடி உறுப்பினர் சேர்த்ததாக அறிவித்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஏனென்று சொன்னால் இப்போது ஒரு தொகுதியிலே இரண்டரை லட்சம் ஓட்டுகள் இருக்கிறார்கள் என்றால், மூண்றரை லட்சம் வாக்களர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம் என்று உங்கள் கட்சிக்காரர்கள் கொடுக்கிற புள்ளி விவரங்களை பார்க்கும் போது நகைச்சுவையாக பார்ப்பதா? அல்லது அறியாமையாக பார்ப்பதா? அல்லது ஆர்வக்கோளாறு என்று பார்ப்பதா?. அதைப்போல இன்றைக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவது மிகப்பெரிய கின்னஸ் நகைச்சுவையை தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.