Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (28.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் செயற்பொறியாளர் அறிவிப்பு
நாளை 28.07.2025 (திங்கள் கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் 110/33-11 கி.வோ அரசரடி உப மின் மின்நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில மாதாந்திர பராமரிப்பு பணிகள் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை மேற்கு பெருநகர மின் செயற்பொறியாலர் சி.லதா தகவல் வெளியிட்டுள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, E.Bகாலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, ESI மருத்துவமணை, கைலாசபுரம், SS காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, DSP நகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 19 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளாகும்.