மதுரையில் இரட்டை இரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் இரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றும், புதிய இரயில்களை இயக்குவதற்கும் இது உதவியாக இருக்கும் என்று தெற்கு இரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து, இன்று (பிப்ரவரி,5) மதுரை- கோவை, விழுப்புரம்- மதுரை, மதுரை-இராமேஸ்வரம் ஆகிய விரைவு இரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
மேலும், நாளை (பிப்ரவரி,06,2023), பிப்ரவரி 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் இரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுவதுமாக ரத்து செய்யப்படுள்ள இரயில்கள் விவரம்:
வண்டி எண். 16867 : விழுப்புரம் - மதுரை விரைவு இரயில், வண்டி எண். 16721- கோவை- மதுரை விரைவு இரயில் ஆகிய இரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு இரயில் எண். 06655 வண்டி (இன்று மாலை 18.10 ) ரத்து செய்யப்பட்டுள்ளது.
கீழே குறிப்பிட்டப்பட்டுள்ள இரயில்கள் அனைத்தும் நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் 8-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண்.16732 - திருச்செந்தூரில் இருந்து நண்பகல் 12.05 மணிக்கு பாலக்காடு புறப்படும் விரைவு இரயில்...
வண்டி எண்.16731- பாலக்காடு- திருச்செந்தூர் விரைவு வண்டி ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வண்டி எண்: 06651 - மதுரை - ராமேஸ்வரம், - 06.50 / வண்டி எண்- 06653 - மதுரை - ராமேஸ்வரம்- 12.30 / வண்டி எண். 06655 - மதுரை- இராமேஸ்வரம் : 18.10 / வண்டி எண். 06652 ராமேஸ்வரம் - மதுரை -05.40 மணி / வண்டி எண்: 06654 ராமேஸ்வரம் - மதுரை . 11.00 / வண்டி எண். 06656 ராமேஸ்வரம் - மதுரை - 18.00 / வண்டி எண். 06609 திண்டுக்கல் - மதுரை - 08.00 / வண்டி எண். 0661- மதுரை - திண்டுக்கல் - 18.10 ஆகிய முன்பதிவில்லா சிறப்பு இரயில்கள் மூன்று நாட்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள இரயில்களின் விவரம்:
இன்று வண்டி எண். 06664- செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லா இரயில் விருதுநகர்- மதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இது விருதுநகர் வரை மட்டுமே செல்லும்.
வண்டி எண், 16343 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் நாளை கூடல் நகர் வரை மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டி எண். 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் விரைவு இரயிலின் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இரயில் நிலையங்கள் வழியாக செல்லும். இந்த விரைவு இரயில் மதுரை, சோழவந்தான்,திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய இரயில் நிலையங்கள் நிற்காது.
கோவை - மதுரை தினசரி ரயில் (வண்டி எண்: 16721) 3 நாட்களுக்கு திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, கோவை - திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்
கோவை - நாகா்கோவில் தினசரி ரயில் (வண்டி எண்: 16322) மூன்று நாட்களுக்கு கோவை - விருதுநகா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் விருதுநகா் - நாகா்கோவில் இடையே மட்டுமே இயக்கப்படும்.
.
மதுரை - கோவை தினசரி ரயில் (எண்: 16722) பிப்ரவரி 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினங்களில் திண்டுக்கல் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் இரயில்:
இந்த அறிவிப்புகளை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.