தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் ஆறு மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த கண்ணன், இவர் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயபிரபா இவர் தனது குழந்தைகளுடன் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வசந்த கண்ணன் அவரது சம்பந்தப்பட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் லோயர் கேம்பில் சிறைத்துறை அதிகாரியின் மனைவி தங்கியுள்ள அவரது தந்தை வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் முக்கிய ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.