மதுரை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 11-12-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை மேற்கு செயற்பொறியாளர் சி.லதா குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வில்லாபுரம் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, FF ஈரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல்நகர், மணிகண்டன்நகர், மயானரோடு, அகஸ்தியர்தெரு, அன்புநகர், காளியம்மன்கோவில், காமராஜர்தெரு, அருப்புக்கோட்டை மெயின்ரோடு ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர்வரை, வில்லாபுரம் TNHB புதுநகர், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் வெற்றி தியேட்டரிலிருந்து வாக்கி தெரு வரை, LK துளசிராம்தெரு, மீனாட்சிநகர், கணபதிநகர், நல்லதம்பி தோப்பு, காவேரிதெருக்கள், செந்தமிழ்தெருக்கள், சௌடேஸ்வரியம்மன் கோவில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால் பகுதிகள், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 182 வாசுகி தெரு தந்தகோபாலன் தெரு, மற்றும் நேதாஜி தெரு” உள்ளிட்ட பகுதிகளாகும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி