அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 19 ரன்கள் இலக்கை 3 ஓவர்களில் அடித்து முடித்தனர்.


அடிலெய்டு டெஸ்ட்:


அடிலெய்டு ஓவலில் நடந்த இந்த போட்டியில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து , ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்த மோசமான  தோல்வியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா வலுவாக பதிலடி கொடுத்தது. 


முதல் இன்னிங்ஸ்: இந்தப்போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் இந்திய அணி 180 ரன்களுக்கு சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் 48 ரன்களை விட்டுக்கொடுத்து  6 விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவில் ஹெட்டின் அபார சதத்தால் 157 ரன்கள் முன்னிலை பெற்றது. டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தார்.


இதையும் படிங்க: WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு


இரண்டாவது இன்னிங்ஸ்:  இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 128-5  எடுத்து இருந்தது. இந்த நிலையில் இந்தியா 3 ஆம் நாள் முதல் ஓவரிலேயே ரிஷப் பந்தை இழந்தது,  ஸ்டார்க் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித்திடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானர். நிதீஷ் ரெட்டியும், ஆர்.அஷ்வினும்  அணியை சரிவில் இருந்தும் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீட்க போராடினர்.  கம்மின்ஸ் தனது ஷார்ட்-பால் உத்திகளைத் தொடர்ந்து அஷ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா மற்றும் ரெட்டி ஆகியோரை வெளியேற்றினார், சிறிது நேரத்தில் நிதிஷ் ரெட்டியும்  வெளியேற போலந்து இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது சிராஜை எடுத்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.






ஆஸ்திரேலியா வெற்றி: 


19 ரன்கள் என்கிற இலக்கை ஆஸ்திரேலிய அணி 3 ஒவர்களில் எடுத்து வெற்றி பெற்றது, ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்கிற கணக்கில் சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி. 






இவ்விரு அணிகளுக்கான இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைப்பெறவுள்ளது.