Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (04.02.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

 

 தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

 


 

மின்நிறுத்த நேரம்

 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்

 

மின் தடை செய்யப்படும் பகுதிகள்

 

அதன்படி நாளை (04.02.2025) மதுரை வடக்கு மின் செயற்பொறியாளர் எஸ்.ஆர். ஸ்ரீராம், வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி...” இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், மேலமடை,எல்கார்ட் கமாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலை மலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி, கார்டன் ஸ்ரீ ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதிஸ்வரன் நகர், டி.எம் நகர் பின்புரம், வி.என் சீட்டி, கிளாசிக் அவென்யூ, தாசில்தார், அண்ணாமலையார் பள்ளி, ஆவின் நகர், ஜீப்பிலி டவுன், மருதுபாண்டியர் நகர், யாகப்பா நாகர், யானைக்குழாய், சதாசிவம் நகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.


 


 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை