TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை

TN Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Continues below advertisement

TN Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Continues below advertisement

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை, படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட பிறகு, 10 தமிழக மீனவர்களும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழகம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு கூட நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடரும் மீனவர்கள் கைது:

  • கடந்த மாதம் 12ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
  • கடந்த 26ம் தேதியன்று தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
  • கடந்த மாதம் 28ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
  • கடந்த 30ம் தேதி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, விசைப்படகுடன் இலங்கை கடற்படை செய்தது

இப்படி தொடரும் கைது நடவடிக்கைகளால், தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தபாடில்லை. பலமுறை போராட்டம் நடத்தியும், கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தும் கூட, தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு நிரந்தர தீர்வு காணவில்லை.

Continues below advertisement