லேசா குறைந்த மல்லிகைப் பூ விலை... எவ்வளவு தெரியுமா..?
மதுரை மல்லிப்பூவின் விலை கடந்த சில நாட்களாக 5 ஆயிரம், 4500 வரை விற்பனையானது என்பது குறிப்பிடதக்கது.
Continues below advertisement

மல்லிகைப் பூ
விசேஷ நாட்கள் எதுவும் இல்லை என்பதால் பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கூட மல்லிகைப்பூ வரத்து வழக்கம் போல் மிக குறைவாகவே உள்ளது. அடுத்த சில நாட்களிலும் இதே விலை நிலவரம் நீடிக்கும் அல்லது விலை குறைய வாய்ப்பு உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் நிலவரம்
மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரை என்றதும் நினைவிற்கு வருவது மல்லிகைப் பூ தான். தனித்துவமான நிறம், வாசனை, பூவின் கெட்டித் தன்மை என்று மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் விளையக்கூடிய பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடு என நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆன்மீகநகரமாக கருதப்படும் மதுரையிலிருந்து பூக்களை வாங்க வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். மதுரையில் கிடைக்கும் பூக்கள் தான் வாசனை திரவியங்களுக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை மல்லிப்பூவின் விலை கடந்த சில நாட்களாக மல்லிகைப் பூவின் விலை 5 ஆயிரம், 4500 வரை விற்பனையானது. இந்த சூழலில் முகூர்த்த நாட்கள் குறைந்ததால் தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
click link - மயிலாடுதுறையில் மையத்தில் உள்ள கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா - எந்த கோயில் தெரியுமா?
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை (03.2.2025) நிலவரம்:
மதுரை மல்லி கிலோ ரூ.3000, மெட்ராஸ் மல்லி ரூ.800, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.1000, செவ்வந்தி ரூ.120, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1200, ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.60, அரளி ரூ.150, தாமரை (ஒன்றுக்கு) ரூ.20 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விசேஷ நாட்கள் எதுவும் இல்லை என்பதால் பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கூட மல்லிகைப்பூ வரத்து வழக்கம் போல் மிக குறைவாகவே உள்ளது. அடுத்த சில நாட்களிலும் இதே விலை நிலவரம் நீடிக்கும் அல்லது விலை குறைய வாய்ப்பு உள்ளது. என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.