விடாமுயற்சி 


மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். . ஓம் பிரகாஷ் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். 


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


விடாமுயற்சி பாடல் லிரிக்ஸ் 


விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் நாளை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கிரீடம் , ஜீ , மங்காத்தா , என்னை அறிந்தால் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார்கள். வேதாளம் , விவேகம் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அனிருத் அஜித் படத்திற்கு இசையமைத்துள்ளார் . தற்போது அனிருத் இசையில் சவாட்டிகா என்கிற பாடல் நாளை வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகும் பாடல்கள் இன்ஸ்டண்ட் ஹிட் ஆகி வரும் நிலையில் இந்த பாடலின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 


சவாட்டிக்கா பாடலின் சில வரிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விஜயின் அரேபிக் குத்து , ரஜினியின் மனசிலாயோ மாதிரி அஜித்திற்கு இது ஒரு செம ட்ரிப்பான பாடலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்


சவாட்டிக்கா சவாட்டிக்கா


ட்ரிப்பா ட்ரிப்பிங்கா..


ட்ரிப்பா ட்ரிப்பிங்கா..


யக்கா கப்புங்கா...


இப்பாடலை ஃபோல்க் மார்லீ , அந்தோன் தாசன் மற்றும் அறிவு ஆகிய மூவரும் சேர்ந்து பாடியுள்ளார்கள். விடாமுயற்சி படத்தின் இப்பாடல் பெரியளவில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் என சொல்லலாம்