Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (25.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.
தமிழ்நாடு மின் வாரிய மதுரை மேற்கு பெருநகர் செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் சி.லதா தெரிவித்தது.
- Israel Attacks Lebanon: கொத்து கொத்தாக பிணங்கள்..! 492 பேர் உயிரிழப்பு, 1600 பேர் காயம் - இஸ்ரேல் தாக்குதலால் கலங்கிய லெபனான்
ஆனையூர் பகுதி
மதுரை ஆனையூர் துணை மின்நிலையத்தில் (26.9.2024 வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே ஆனையூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1 முதல் 7-வது தெரு வரை, பெரியார்நகர், அசோக்நகர், ரெயிலார்நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி, கூடல் நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி, பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர்,துளசிவீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, லட்சுமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
பழங்காநத்தம்
பழங்காநத்தம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அதிலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருவள்ளுவர் நகர் முழுவதும், ஆர்.சி. தெரு ஒருபகுதி, டி.பி.கே. ரோடு ( சரவணா ஸ்டோர் முதல் இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி வரை), யோகியார் நகர் பகுதி, தண்டல்காரன்பட்டி ஒரு பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 26.9.2024 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
அதே போல் 27.9.2024 அன்று பசுமலை ஒரு பகுதி மட்டும்
மூட்டா தோட்டம், முட்டா காலனி, நிலா நகர், கோபால்சாமி நகர், ஐக்காதேவி தெரு, சூரியகாந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி மட்டும் மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.