Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (20.12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

 

மின் பாதையில் பராமரிப்பு பணிகள்  


 

தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை சமயநல்லூர் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம்

 

மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:


 

உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர் பகுதிகள் மற்றும் மாணிக்கம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள் மின் தடை செய்யப்படுகிறது.

 

அலங்காநல்லூர் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:


 

அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல் சுகர்மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, சின்னக்கவுண்டம்பட்டி, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள் மின்தடை செய்யப்படுகிறது.


 

ஆதே போல் மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாளை 20.12.2024 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதி.

 

உறங்கான்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
 

உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கள், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளாகும்