சபரிமலை கோயிலில் உள்ள மேற்கூரையில் இருந்து பக்தர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூரையில் இருந்து விழுந்த பக்தருக்கு கை,கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகி உள்ளது.




கேரள மாநிலம் சபரிமலை கோயில் பிரசித்தி பெற்றது. சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் நடைபெறும் இந்த பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதற்காக தேவசம் போர்டு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!


இந்த நிலையில்,  நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் உள்ள மேற்கூரையில் இருந்து பக்தர் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான குமாரசாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.


குறிப்பாக அவரது கை,கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். விசாரணையில் இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாரடைப்பு வருவதை தடுக்க தேவசம் போர்டு ஏற்பாடு


சபரிமலை பாதைகளில் பக்தர்கள் மாரடைப்பு மூலம் மரணம் அடைவதை குறைக்க ஏ. இ. டி. என்ற ஆட்டோமேட் எக்ஸ்டேனல் டிபைபிரிலேட்டர் கருவிகளை வாங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. பெருவழிப்பாதையும், பம்பையில் இருந்து சன்னிதானம் வரும் நீலிமலை பாதையும் செங்குத்தான ஏற்றங்களை கொண்டவை. இதய பாதிப்பு உள்ளவர்கள் இதில் ஏறும் போது இதயத்துடிப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்காக நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற இடங்களில் இதய நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.


“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!




எனினும் சில நேரங்களில் மரணம் ஏற்படுகிறது. இதை தடுத்து குறைப்பதற்காக இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆட்டோமேட் எக்ஸ்டேனல் டிபைபிரிலேட்டர் கருவிகளை வாங்குகிறது. முதற்கட்டமாக ஐந்து கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சன்னிதானம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்படும் பக்தருக்கு 10 நிமிடங்களுக்குள் இந்தக் கருவியின் உதவி கிடைத்தால் 80 சதவீதம் காப்பாற்றிவிடலாம் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். பம்பையில் இருந்து அப்பாச்சி மேடு வரை உள்ள அவசர சிகிச்சை மையங்களில் இந்த கருவி வைக்கப்படும். வரும் காலங்களில் பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதையில் ஒவ்வொரு அரை கிலோமீட்டரிலும் இந்த கருவி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.